Back To Top

AN AUTOBIOGRAPHY(Tamil)

80.00

Product Details :

  • Hardcover: 622 pages
  • Publisher: Navjivan; Fifty Second Reprint edition (2013)
  • Language: Tamil
  • ISBN-10: 8172290802
  • ISBN-13: 978-8172290801
  • Product Dimensions: 17.6 x 12 x 2.9 cm
  • Product Description :

நாலைந்து ஆண்டுகளுக்கு முன், ஏன் சுய சரிதையை நான் எழுத வேண்டும் என்று என் நெருங்கிய சகாக்கள் சிலர் யோசனை கூறியதன் பேரில், நானும் எழுத ஒப்புக்கொண்டேன்; எழுதவும் ஆரம்பித்தேன். ஆனால், முதல் பக்கத்தை எழுதி முடிப்பதற்குள்ளேயே பம்பாயில் கலவரம் மூண்டுவிட்டதால் அவ்வேளை தடைபட்டு விட்டது. பிறகு ஒன்றன்பின் ஒன்றாக பல சம்பவங்கள் நடந்து எரவடாவில் என் சிறை வாசத்தில் முடிந்தது. அங்கே என்னுடன் கைதியாக இருந்த ஸ்ரீ ஜெயராம்தாஸ், என்னுடைய மற்ற எல்ல வேலைகளையும் கட்டி வைத்துவிட்டுச் சுய சரிதையை எழுதி முடிக்கும்படி கேட்டுக் கொண்டார். நானோ, சிறையில் பல நூல்களை படிப்பது என்று திட்டமிட்டிருந்தேன். அந்த வேலையே முடிப்பதற்கு முன்னாள் நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை என்று அவருக்கு பதில் சொன்னேன்.